'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமாவில் பெரும்பாலும் தங்களது ஆண் வாரிசுகளை தான் களத்தில் இறக்குவார்கள். ஓரிருவர் மட்டுமே விதிவிலக்காக பெண் வாரிசுகளையும் சினிமாவில் இறக்கி விடுவார்கள். அந்த பட்டியலில் ரஜினி, கமல், அர்ஜுன், விஜயகுமார் என பலர் இடம் பெற்றுள்ள நிலையில் இயக்குனர் ஷங்கரும் இப்போது இணைந்திருக்கிறார். அவரது மகள் அதிதி ஷங்கர், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தில் அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித் விரைவில் ஹீரோவாக அறிமுகமாவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் யாருடைய இயக்கத்தில் அறிமுகமாக போகிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தனது மகனை அறிமுகம் செய்ய ஷங்கர் விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவரது மகன் அர்ஜித்தோ, அட்லீயின் இயக்கத்தில் அறிமுகமாக ஆசைப்படுவதாக இன்னொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது.
அதாவது பிகில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு கதையை அவரிடத்தில் அட்லீ கூறி இருப்பதாகவும், அந்த கதையில் தான் அறிமுகமாக அர்ஜித் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலாஜி சக்திவேல், அட்லீ ஆகியோர் டைரக்டர் ஷங்கரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.