Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 66 - இசையமைப்பாளர், கதாநாயகி வாய்ப்பு யாருக்கு?

27 ஜன, 2022 - 19:40 IST
எழுத்தின் அளவு:
Vijay-66-:-Who-is-heroine-and-music-director

விஜய்யின் 65வது படமாக உருவாகி வரும் 'பீஸ்ட்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து விஜய்யின் 66வது படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்க உள்ளார்கள். அப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இன்னும் ஒரு மாதமே படப்பிடிப்புக்கு உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் சமீப காலங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் தமன் இசையமைக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது. விஜய்யின் 65வது படமாக 'பீஸ்ட்' படம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தான் விஜய் நடிப்பதாக இருந்தது. அப்போது அந்தப் படத்திற்கு தமன் தான் இசையமைப்பாளராக இருந்தார். ஆனால், முருகதாஸ் படத்தை இயக்கவில்லை என்றானதும் தமனும் அப்படத்தில் பணியாற்றவில்லை. எனவே, விஜய்யின் 66வது படத்தில் தமன் இசையமைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

கதாநாயகியாக பாலிவுட் நடிகைகள் யாராவது புதிதாக வருவார்களா, அல்லது ஏற்கெனவே விஜய்யுடன் ஜோடியாக நடித்த நடிகைகள் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வெகு சீக்கிரத்திலேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ஹைதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு பக்கம் வருவாரா ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்?தெலுங்கு பக்கம் வருவாரா ஸ்ரீதேவி ... விஜய் 66 - பக்கா மாஸ் குடும்ப படத்தில் விஜய் : தயாரிப்பாளர் தகவல் விஜய் 66 - பக்கா மாஸ் குடும்ப படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
28 ஜன, 2022 - 10:16 Report Abuse
Bala Murugan ஜோசப் விஜயுடன் இந்த பாலமுருகன் இருக்க வாய்ப்பு கிடைக்குமா? எனக்கு வயது நாற்பது. இன்னும் திருமணம் ஆகவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in