'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிக்பாஸ் அல்டிமேட் என்கிற ஓடிடி நிகழ்ச்சி விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவர் பெயராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். முதல் போட்டியாளராக ஓவியா வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம், சிநேகன் மற்றும் ஜூலி போட்டியாளராக என்ட்ரி கொடுக்கும் தகவலை பிக்பாஸ் குழு புரோமோ வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் அடுத்த போட்டியாளராக வனிதா விஜயகுமார் பங்கேற்கவுள்ள தகவலை மேலும் ஒரு புரோமோவின் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த புரோமோவில் கெத்தா கிளம்பும் வனிதா 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. சம்பவம் இனிமே தான் ஆரம்பம்' என கூறுகிறார். இந்த புரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சர்ச்சை நாயகி வனிதாவின் வருகை குறித்து தெரிந்து கொண்ட சின்னத்திரை ரசிகர்கள் 'வனிதா வாந்தாச்சா... இனி டரியல் தான்' என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.