புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா |
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம்-ஜீவா நடித்துள்ள படம் டேவிட். தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தி பதிப்பில் 15 பாடல்கள், தமிழில் 9 பாடல்கள் என வித்தியாசமான பாணியில் படம் தயாராகி உள்ளதாம். இரண்டு வாழ்க்கை ஒரு கதை என்ற முறையில் படமாக்கியுள்ள டேவிட் படத்தை விக்ரமை விட ஜீவா ரொம்பவே எதிர்பார்க்கிறார். தற்போது தமிழிலும் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், இந்தியில் ஒரு ஹிட் கிடைத்தால் அதன்பிறகு அவ்வப்போது ஒரு இந்தி படத்திலும் நடிக்கலாமே என்று நினைக்கிறாராம்.
மேலும், நான் நடிக்க வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுவரை எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க்கை இந்த படத்துக்கு எடுத்திருக்கிறேன் என்று சொல்லும் ஜீவா, ஒரு சண்டை காட்சியில் மட்டும் 5 நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். ஆனால் அந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்ப விமானத்தில் ஏறியபோதுதான் உடல் வலி தெரிந்ததாம். அவரால் சீட்டில் உட்கார கூட முடியவில்லையாம். அந்த அளவுக்கு சண்டை காட்சியில் கஷ்டப்பட்டு நடித்தாராம் ஜீவா. அதனால் நான் பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்கிறார் அவர்.