சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
நடிகர் தனுசும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரஸ்பரம் அறிவித்திருக்கிறார்கள். இருவரும் முறைப்படி கோர்ட் மூலம் விவாகரத்து பெற இருக்கிறார்கள். இந்த நிலையில் தனுசின் தந்தை கஸ்தூரிராஜா இதுபற்றி கூறியிருப்பதாவது:
தனுசும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சின்ன சண்டை அவ்வளவுதான். இது வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் இப்போது ஐதராபத்தில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இருவருக்கும் தக்க அறிவுரை கூறியிருக்கிறேன். விரைவில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள். என்றார்.
இயக்குனரும், விஜய்யின் தந்தையுமாக எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கணவன்-மனைவி பிரிந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். இது கனவாக இருக்க கூடாதா, இது பொய்யான செய்தியாக இருக்க கூடாதா என்று நினைக்கிறேன். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு சர்வ சாதாரணம். அதற்கு பிரிவு தீர்வல்ல. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதெங்கே... நமக்கும் கீழே உள்ளவர்கோடி என்பதை நினைத்து நிம்மதி தேடு என்கிற கண்ணதாசன் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. நல்லதே நடக்கும். என்று கூறியிருக்கிறார்.