'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தொடர்ச்சியாக புரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. இந்நிலையில், குக் வித் கோமாளி-3ன் சமீபத்திய புரோமோவில் பிரபல சின்னத்திர நடிகையான ரோஷினி ஹரிப்பிரியன் கலந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன் தனிப்பட்ட காரணங்களால் தொடரை விட்டு விலகினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகம் அடைந்தனர். இதற்கிடையில் ரோஷினி சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். ரோஷினி மீண்டும் சின்னத்திரையில் அதுவும் பிரபலமான நிகழ்ச்சியில் ரீ எண்ட்ரி கொடுப்பதால், குக் வித் கோமாளி சீசன் 3ஐ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.