Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டிஆர்பியில் டாப் இடத்தை சுந்தரி சீரியல்!

19 ஜன, 2022 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Sundari-Serial-tops-TRP

நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்து வரும் சுந்தரி தொடர், தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சீரியல் ஆரம்பித்து பல நாட்களாக அதன் எபிசோடுகள் சுவாரசியமின்றி டம்மியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில், நாயகனின் இரண்டு பொண்டாட்டி தில்லு முல்லு வெளிப்படும் வகையில் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், பலநாட்களாக டிஆர்பியில் நம்பர் 1-ல் இருந்த 'கயல்' தொடரை இரண்டாம் இடத்துக்கு தள்ளி, முதலிடத்தை 'சுந்தரி' தொடர் பிடித்துள்ளது.

இதனையடுத்து மூன்றாவது இடத்தை 'ரோஜா', நான்காவது இடத்தை 'வானத்தை போல', ஐந்தாவது இடத்தை 'கண்ணான கண்ணே' ஆகிய தொடர்கள் பிடித்துள்ளன. இதன் மூலம் தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பியில் முதல் 5 இடத்தை ஒரே டிவி சேனல் தக்க வைத்துள்ளது. விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில நாட்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி 6வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 7வது இடத்திலும், நம்பர் 1 சீரியலாக வலம் வந்த பாரதி கண்ணம்மா தற்போது 8வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குக் வித் கோமாளி சீசன் 3-ல் பாரதி கண்ணம்மா நடிகை!குக் வித் கோமாளி சீசன் 3-ல் பாரதி ... குக் வித் கோமாளி சீசன் 3: 22ம் தேதி முதல் ஒளிபரப்பு குக் வித் கோமாளி சீசன் 3: 22ம் தேதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Arul. K - Hougang,சிங்கப்பூர்
19 ஜன, 2022 - 13:17 Report Abuse
Arul. K டி ஆர் பி மட்டுமே முக்கியம். அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தை பற்றி கவலை இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in