2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக விளங்கும் குக் வித் கோமாளி நான்காவது சீசனை முடித்து 5 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அதேபோல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கும் கோமாளிகளுக்கும் இணையாக ஜட்ஜுகளுக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், புதிதாக ஆரம்பிக்கவுள்ள சீசனில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் தனக்கு பதிலாக வேறொரு ஜட்ஜ் கலந்து கொள்வார் என செப் வெங்கடேஷ் பட் அண்மையில் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு செப்பான தாமுவும் குக் வித் கோமாளி சீசன் 5-ல் நானும் வெங்கடேஷ் பட்டும் இல்லை என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதேசமயம் இருவரும் சேர்ந்து புதிதாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.