பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் சென்றவர் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டார். அதன்பின் தமிழ் சினிமா பக்கம் அவர் எட்டி பார்க்கவே இல்லை. ஆனால் விஜய்யிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, “தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது... ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்தாலும் கூட கேரவன் பக்கமே போகாமல் செட்டிலேயே அமர்ந்திருப்பார் விஜய்.. அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன்.. படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு செல்வேன்.. மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதுபற்றியாவது தெரிந்து கொள்வதற்காக சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார்.