காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழ் சினிமாவில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்து வருபவர் கமல்ஹாசன். நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அவரது படங்களிப்பு சினிமாவில் முக்கியத்துவம் பெற்றது. அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.
அடுத்து இந்நிறுவனம் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். 2017ல் கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த 'ரங்கூன்' படத்தை இயக்கியவர் இவர்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது திறமையால் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன். தற்போது 'அயலான், டான்' படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 20வது படமான, அப்படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படம் சிவகார்த்திகேயனின் 21வது படம்.
தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து எப்போதாவது ஒரு முறைதான் கமல்ஹாசன் படங்களைத் தயாரிப்பார். இதற்கு முன்பு 1987ல் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்தில் சத்யராஜ், 2003ல் 'நளதமயந்தி' படத்தில் மாதவன், 2019ல் 'கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது அந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதை தமிழ்த் திரையுலகம் ஆச்சரியமாகப் பார்க்கிறது.