நடிகை மீனா கணவர் மறைவு : ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி | 'வாரிசு' தயாரிப்பாளருக்குப் பிறந்த ஆண் வாரிசு | மோகன்லாலின் அலோன் படமும் ஓடிடி ரிலீஸ் தான் | நடிகர் பூ ராமு மறைவு ; மம்முட்டி நெகிழ்ச்சி பதிவு | சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிஜுமேனன் | ரேவதிக்கு விருது : கொண்டாடி மகிழ்ந்த தோழிகள் | பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான் | பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை |
இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002ம் ஆண்டில் வெளிவந்த படம் ‛அழகி'. இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.
இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அழகி வயது 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா, தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க.. அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு. (எனக்கோ என்றும் காதல் தாண்டா கவிமனது!)
அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே சேரும். அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட காரணம், ஒப்பனையில்லா நிஜதன்மை நிறைந்த காதல். எல்லோர் வாழ்விலும் வந்துப் போன (அ) நொந்துப் போன காதல் வடு 'அழகி'! தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்றளவில் இன்றளவும் இதயத்தை (20)வருட சண்முகத்தின் பகுதி 1, பகுதி 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால், பகுதி 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த முயற்சிக்கிறார் தங்கர். ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.