'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரது நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. தெலுங்கில் தயாரான இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் படத்திற்கு பெரிய அளவில் எந்த விளம்பரத்தையும் செய்யவில்லை. இருந்தாலும் படம் எதிர்பார்ப்பிற்கும் மேலான வசூலை அள்ளியது. தமிழகத்தில் மட்டும் 25 கோடிக்கும் அதிகம் வசூலித்து லாபத்தைக் கொடுத்தது.
கடந்த வாரம் 7ம் தேதி இப்படம் ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஹிந்தியில் தற்போது வரை தியேட்டர் வசூல் மூலம் 80 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. வரும் ஜனவரி 14ம் தேதி ஓடிடி தளத்தில் ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது. அதனால், அடுத்த இரண்டு நாட்களுக்குள் இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வர உள்ளது.
இதுவரையில் மொத்தமாக 325 கோடி அளவில் வசூலித்துள்ள இந்தப் படம் கடந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.




