நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் |
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, ஞாயிறு முழு ஊரடங்கு என்றாலும் இந்த வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் ஜனவரி 7ம் தேதியன்று மூன்று புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகியது.
இந்த வாரம் பொங்கல் வாரம் என்பதால் கிடைக்கும் வாய்ப்பில் படங்களை வெளியிட்டுவிட வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். பொங்கலுக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' வெளிவராததே இதற்குக் காரணம்.
ஜனவரி 13ம் தேதி, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, மருத, நாய்சேகர்” ஆகிய படங்களும், ஜனவரி 14ம் தேதி 'எஜிபி, பாசக்காரப் பய, தேள்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இவற்றில் எந்தப் படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என்பது அந்தந்த தயாரிப்பாளர்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தது.
தினசரி 3 காட்சிகள் ஓடினால் கூட போதும், போட்ட முதலீட்டை எப்படியாவது எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இப்படங்களை வெளியிடுகிறார்கள். மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்தே இவற்றின் வசூலும் அமையும்.