ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'.
தமிழ் சினிமாவில் வந்த படங்களில் ஒரு கிளாசிக் படமாக இந்தப் படம் பெயர் பெற்றது. இப்படத்தைத் தற்போது ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிக்க புஷ்கர் - காயத்ரி இயக்கி வருகிறார்கள். தமிழில் மாதவன் நடித்த 'விக்ரம்' கதாபாத்திரத்தில் ஹிந்தியில் சைப்அலிகானும், விஜய் சேதுபதி நடித்த 'வேதா' கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கிறார்கள்.
இன்று ஹிருத்திக் ரோஷன் பிறந்தநாளை முன்னிட்டு 'வேதா' கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டது. போஸ்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அது பற்றி தமிழில் 'விக்ரம்' ஆக நடித்த மாதவன், “இப்போது நான் பார்க்க விரும்பும் 'வேதா'.....வாவ்.. ப்ரோ… இது ஒரு காவியம்” என கமெண்ட் கொடுத்து பாராட்டியுள்ளார்.
தங்கள் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, “உங்களுடன் பணி புரிவது பிரமிக்க வைக்கிறது. சிறந்த வருடமாக அமைய வாழ்த்துகள். 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும்,” என இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.