டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் அவரது 20வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் தற்போது முக்கிய இசையமைப்பாளராக உயர்ந்துள்ள தமன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த கூட்டணி குறித்து தமன், “எனது நெருங்கிய நண்பன், கிரிக்கெட்மேட் சிவாவுடன் முதல் முறை இணையும்” என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இன்று படம் பற்றி மேலும் ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார் தமன்.
“நேற்று இரவுதான் நான் மிக அதிகமாக சிரித்த முதல் இரவு. இந்த பூமியில் உள்ள அறிவுள்ள மனிதர்களில் டைமிங்கில் நிறையவற்றைக் கொடுக்கும் டார்லிங்ஸ் உடன்,” என சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப், நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.