பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
2022ம் ஆண்டு கொரோனா மூன்றாவது அலையுடனே ஆரம்பமாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகவில்லை என்பதால் தற்போது தியேட்டர்கள் கிடைக்க அதிக வாய்ப்பு.
தமிழகத்தில் இருக்கும் 1000 தியேட்டர்களிலும் 'வலிமை' படத்தை வெளியிட வாய்ப்பில்லை. படம் வெளிவரும் பட்சத்தில் 600 தியேட்டர்கள் வரை வெளியாக வாய்ப்புள்ளது. மீதியுள்ள 400 தியேட்டர்களில் 300 தியேட்டர்களிலாவது மற்றொரு முக்கிய படத்தை வெளியிட தியேட்டர்கள் கிடைக்கும்.
அதனால், விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியானது. அந்தத் தகவல் வெறும் தகவல்தானே தவிர அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல. ஒரு படத்தின் சென்சார் முடியாமல் அதன் வெளியீட்டுத் தேதியை விளம்பரங்களில் குறிப்பிட முடியாது. எனவே, படத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை படத்தின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேதியுடன் வெளியிடவில்லை.
சென்சார் வேலைகள் முடிந்தால் மட்டுமே அவர்கள் தேதியுடன் அறிவிப்பை வெளியிடுவார்கள். சமூக வலைத்தளங்களில் மட்டும் படம் பொங்கல் வெளியீடு என தகவலைப் பரப்பி வருகிறார்கள்.