ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
சின்னத்திரை மூலம் புகழ்பெற்றவர் பிரஜின். அதன் பிறகு சினிமாவுக்கு சென்றார். தீ குளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை உள்பட சில படங்களில் நடித்தார். ஆனால் போதிய வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார்.
என்றாலும் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி இருக்கிறார். நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். குஹாசினி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். ஜிஜு ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது: இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை. அரசியல், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டு நடப்பு, அரசியலைத் தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும். என்கிறார் இயக்குநர் சீயோன்.