பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க உள்ளார். நிதி அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கிறார். தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார்.
இந்நிலையில், அவர் நடித்த மதுபான விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், ஒரு கோப்பையில் மதுவை ஊற்றி அவர் நுகர்ந்து பார்க்கும் காட்சியும் அந்த மதுபானம் சுவைக்கவும் பருகவும் சிறந்தது என்று பேசும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவின் மிகச்சிறந்த மது வகை என்று பாராட்டுச் சான்றிதழும் வழங்குகிறார்.
இந்த விளம்பரம் இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும், சமூக வலைத்தளத்தில் அவரை பின்பற்றுகிறவர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோரும் ஏற்கெனவே மது விளம்பரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




