அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே - நயன்தாரா | மீனாவின் கணவர் மரணம் ; யாரையும் பயமுறுத்த வேண்டாம் : குஷ்பு |
புஷ்பா படத்திற்காக சமந்தா ஆடிய குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. "ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா..." யூ டியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது. பாடல் மட்டுமல்லாமல் சமந்தாவின் ஆட்டமும் எல்லோரையும் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது அதே பாணியில் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரெஜினா. சிரஞ்சீவியும் போட்டி போட்டு ரெஜினாவுடன் ஆடி உள்ளார். இந்த பாடல் சமந்தா பாடல் போல பட்டைய கிளப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த படத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் நாயகர்களாக நடித்துள்ளனர். சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ராம்சரண் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஆச்சார்யா படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளிவருகிறது.