'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா மற்றும் பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 83. 1983ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றதுதான் இந்தப் படம். பெரும் அளவில் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் முதல் வார இறுதியில் 50 கோடி வசூலைக் கூடக் கடக்கவில்லை என்பது பாலிவுட்டில் இருந்து வரும் வருத்தமான தகவல்.
இப்படத்திற்கு தற்போது ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அது குறித்து, “83, வாவ்…. என்ன ஒரு படம்…. அற்புதம்… தயாரிப்பாளர்களுக்கும், கபீர்கான், கபில்தேவ், ரன்வீர் சிங், ஜீவா மற்றும் அனைத்து குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். ரஜினியின் பதிவிற்கு 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
இப்படி பல பிரபலங்கள் ஏற்கெனவே பாராட்டினாலும் படத்திற்குக் கிடைக்கும் வசூல் அதிகமாகாமல் இருப்பது. படக்குழுவிற்குக் கவலை அளித்துள்ளது.