பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஜோக்கர் படம் மூலம் வித்தியாச நடிப்பை வெளிப்படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவர் நடிகர் குரு சோமசுந்தரம். ரஜினியின் பேட்ட, சமீபத்தில் வெளியான ஜெய் பீம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் சமீபத்தில் வெளியான மின்னல் முரளி படத்தில் ஆன்டி ஹீரோவாக நடித்துள்ளார்.. அதிலும் நாயகன் டொவினோ தாமஸுக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.
இந்தப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் மோகன்லாலும் குரு சோமசுந்தரத்தை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் மோகன்லால் தற்போது தான் இயக்கிவரும் பாரோஸ் படத்திலும் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறியதோடு, எப்போது வேண்டுமானாலும் பயணப்படுவதற்கு தயாராக இருங்கள் என்றும் கூறியுள்ளாராம். இந்த தகவலை குரு சோமசுந்தரமே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.