‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
சமீபத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு ஈடு கட்டியது. காட்சிகள் எல்லாமே ரியலிஸ்ட்டிக்காக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு படமாக்கி இருந்தார் இயக்குனர் சுகுமார். அதனால் தான் ராஷ்மிகா - அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை கூட அவர் ரொம்பவே நெருக்கமாக படமாக்கி இருந்தார். ஆனால் அது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதை குறிப்பிட்டு சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் சுகுமார், “இதற்கே இப்படி என்றால், அல்லு அர்ஜுன்-பஹத் பாசில் நடித்த் க்ளைமாக்ஸ் காட்சியில் இருவரையும் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடிக்க வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்கினோம். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அது நிச்சயம் விமர்சனத்துக்கு ஆளாகும் என பலரும் கருதியதால், அதை படத்திலிருந்து தூக்கிவிட்டு, வேறு மாதிரியாக அந்த சண்டைக்காட்சியை படமாக்கினோம் என்று கூறியுள்ளார்.