விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
அறிமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன், இனியா, திலிபன் மற்றும் பலர் நடிக்க கடந்த வாரம் வெளியான படம் 'ரைட்டர்'. கடந்த வாரம் வெளிவந்த படங்களில் இப்படத்திற்குத்தான் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இன்னும் சிலருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பிராங்க்ளினை இப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகப்படுத்தினார்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். “பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களுக்குப் பிறகு ரஞ்சித் தயாரித்துள்ள படம் 'ரைட்டர்'. அடுத்து அவரது மற்றொரு உதவியாளர் சுரேஷ் மாரியை இயக்குனராக அறிமுகப்படுத்தி ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார் ரஞ்சித்.
சமீபத்தில்தான் தனது படங்களில் பணியாற்றுபவர்களுக்கு மற்றவர்கள் வாய்ப்பு தருவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ரஞ்சித். அவர் தயாரிக்கும் படங்களில் அவரது உதவியாளர்களுக்கு அவர் இயக்குனராகும் வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறார்.