பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் | வெற்றி பட இயக்குனர் உடன் கைகோர்த்த பஹத் பாசில் | சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம் | மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சில தெலுங்கு மீடியாக்களில் இப்படத்தை ஓடிடி தளத்தில் 'பணம் செலுத்தி பார்க்கும் முறை' மூலம் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. அவற்றை படக்குழு மறுத்துள்ளதாம்.
திட்டமிட்டபடி ஜனவரி 7ம் தேதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்களாம். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வியாபாரமும் மிகப் பெரும் அளவில் நடந்துள்ளது.
இன்று மாலை சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.