சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா குணமாகி வருகிறார். தேறி வரும் யாஷிகா அடிக்கடி தன்னுடைய உடல் நிலை குறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு பின் முதன் முறையாக எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
உடல் நிலை குணமான நிலையில் யாஷிகா சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது பூரண குணமடைந்துள்ள யாஷிகா, பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது முன்னாள் காதலரான நிரூப்புக்கு சில அறிவுரைகளை கூறிவிட்டு வந்தார். இந்நிலையில் முன்புபோல் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.