சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு | பாலியல் தொழிலாளியாக நடித்த அனுபவம் : வினித்ரா மேனன் |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் பிரபலமான செந்தில், ராஜலெட்சுமி ஜோடி, அந்த சீசனில் வெற்றி பெற்று 50 லட்சம் பரிசை தட்டிச்சென்றது. மேலும், அந்த விழாவில் ராஜலெட்சுமிக்கு 'மக்களின் குரல்' என்று சிறப்பு விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தற்போது சினிமாவிலும் இருவரும் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இவர்கள் காம்போவில் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலெட்சுமி பாடிய 'ஹே சாமி' பாடல் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இவர்கள் விஜய் 66-ல் பாடல் பாடியுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.
இது பற்றி செந்தில் சொல்லும் போது, நானும், என் மனைவியும் விஜய் 66 படத்தில பாட்டு பாடியிருக்கிறத வெளியாகுற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைஞ்சோம். இது வெறும் வதந்தி தான். அஜித் படத்துல பாடிட்டோம். விஜய் படத்திலையும் பாட ஆசையா தான் இருக்கு. ஆவலோடு காத்திட்டு இருக்கோம் என கூறியுள்ளார்.
செந்தில் கணேஷ் தற்போது இரண்டு முன்னணி தமிழ் கதாநாயகர்களுக்கு பாடல் பாடியுள்ளார். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.