கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் | ரம்யாவின் வொர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் கமெண்ட்ஸ் | 'புஷ்பா 2' : கமல்ஹாசன் மட்டும் மிஸ்ஸிங் | கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே |
சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் கூட அவர் நடித்த கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது இந்தியில் அவர் நடித்துள்ள அட்ராங்கி ரே படம், தமிழில் கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அடுத்து அவர் தமிழ், தெலுங்கில் நடிக்க உள்ள படத்திற்கு வாத்தி என்கிற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூட அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். அதிலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே குறிப்பிட்டு புருவங்களை உயர வைத்துள்ளார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படம் நேற்று வெளியாகியுள்ளது. அவர் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக்காயிதம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.