தல பொங்கலை கொண்டாடிய அரவிஷ் - ஹரிகா, விக்ரமன் | ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி | ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு |
ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காகித பூக்கள். எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து, கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக லோகன் மாணிக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரியதர்ஷினி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அப்புச்சி கிராமம் புகழ் பிரவீன் குமார் மற்றும் சமீபத்தில் மறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் நடிகர் தவசி ஆகியோர் நடித்துள்ளனர். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோஸ் நந்தா இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் முத்து மாணிக்கம் கூறியதாவது : குடி பழக்கத்தாலும், தனது பொறுப்பின்மையாலும் தனது அன்பான மனைவியை பிரிந்து வாடும் கணவன், மீண்டும் தனது உயிரை பணயம் வைத்து அவளை அடைகிறான். ஆனாலும் மனதில் ஏற்பட்ட வடுக்கள் மறையுமா..? ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிட்டு விட்டால் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை திரும்பவும் அடைய முடியாது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. என்றார்.