'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து இந்த விழாவை நடத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு நிதி உதவி செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எளிய முறையில் நடந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு 19வது சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 30 ம் தேதி துவங்கி, 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி துவங்கி, இரவு 9.30 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.
சத்யம் சினிமாஸ் , பிவிஆர் , எஸ்டிசி அண்ணா சினிமாஸ் ஆகிய தியேட்டர்களில் இந்த திரைப்பட விழா நடக்கிறது. 60 நாடுகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது ஆகியவற்றுக்கான போட்டிகள் தனியாக நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் ஐந்து உணர்வுகள், பூமிகா, கர்ணன், கட்டில், கயமை கடக்க, மாறா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், சேத்துமான், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், உடன்பிறப்பே படங்கள் ஆகியவை கலந்து கொள்கின்றன.