ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
பூவே உனக்காக படத்திற்கு அடுத்ததாக விஜய்யின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படம் காதலுக்கு மரியாதை. 1997ல் வெளியான இந்தப்படம் இன்று 24ம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனர் பாசில், மலையாளத்தில் தான் இயக்கிய அனியத்தி பிறாவு என்கிற படத்தை அதன் மெருகு குறையாமல் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் மறு உருவாக்கம் செய்தார். இந்தப்படத்தில் இணைந்து நடித்த விஜய்-ஷாலினி இருவரும் எவர்கிரீன் ஜோடியாக ரசிகர்கள் மனதில் பதிந்தனர். சொல்லப்போனால் இந்தப்படம் வெளியான பிறகு இளம்பெண்கள் மத்தியில் விஜய்யின் கிரேஸ் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இளையராஜாவின் இசையில் என்னை தாலாட்ட வருவாளா உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களை தாலாட்டும் பாடல்களாகவே அமைந்திருந்தன. சிவகுமார், ஸ்ரீவித்யா, மணிவண்ணன், ராதாரவி, தலைவாசல் விஜய், சார்லி, தாமு என பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருந்தனர்.
குறிப்பாக யாரும் எதிர்பாராத விதமாக அதேசமயம் உணர்வுப்பூர்வமாக அமைந்த க்ளைமாக்ஸ் காட்சி இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக இருந்தது. காதலுக்கு மரியாதை கொடுத்த இந்தப்படத்தை இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்தனர். காதலை மையப்படுத்தி வெளியான படங்களில், காதலுக்கு புது இலக்கணம் வகுத்து வெளியான இந்தப்படத்திற்கு ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.