மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது |

2021ம் ஆண்டிற்கான வெளியீட்டு வாரங்களாக இரண்டே இரண்டு வெள்ளிக்கிழமைகள்தான் உள்ளன. வரும் வெள்ளிக்கிழமையான டிசம்பர் 24, அதற்கடுத்து டிசம்பர் 31 என இரண்டு நாட்களில் பல படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
டிசம்பர் 24ம் தேதியன்று, “ஆனந்தம் விளையாடும் வீடு, ராக்கி, தள்ளிப் போகாதே, தீர்ப்புகள் விற்கப்படும், ரைட்டர்” ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் 'பிளாக் மணி' என்ற ஒரு படம் வெளியாக உள்ளது. அன்றைய தினம் சில படங்களை அறிவித்தவர்கள் தங்களது வெளியீட்டை தள்ளி வைத்துக் கொண்டார்கள்.
வரும் வாரம் வெளியாக உள்ள படங்களில் எதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை. கதைகளை மையமாக வைத்து வெளிவர உள்ள படங்கள்தான். இந்தப் படங்கள் தவிர தெலுங்கில் தயாராகியுள்ள 'ஷியாம் சிங்கா ராய்', ஹிந்தியில் தயாராகியுள்ள '83' ஆகிய படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளன.