‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள தமிழ் நடிகையான சாய் பல்லவியை தெலுங்குத் திரையுலகம் தக்க வாய்ப்புகளைக் கொடுத்து அவரைக் கொண்டாடி வருகிறது.
நானி நாயகனாக நடிக்கும் 'ஷியாம் சிங்கா ராய்' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் சாய் பல்லவி. அப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுவதற்காக மேடையேறிய சாய் பல்லவியை ரசிகர்கள் பேசவிடாமல் கரகோஷம் எழுப்பி அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாய் பல்லவி தெலுங்கில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களைச் சொல்லி அவரை அழைத்தனர். அதனால், மிகவும் நெகிழ்ந்து போன சாய் பல்லவி மேடையில் கண் கலங்க ஆரம்பித்தார். கண்களில் வழியும் கண்ணீரோடு அவர் பேசினார்.
“உங்கள் முன்னால் இப்படி நிற்பதற்கு நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. இந்த அன்புக்கும், பாராட்டுகளுக்கும் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் நடிக்க என்னை விட திறமையான பலர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே சினிமாவில் நடிக்கவும், புகழ் பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்கிறேன்,” என்றார்.