என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு ‛அண்ணாத்த' படம் திரைக்கு வந்தது. கடும் விமர்சனங்கள் எழுந்தாலும் படம் ரூ.200 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் ரஜினி. அதேசமயம் தனது அடுத்தபடத்திற்கான கதை விவாதங்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளை குடும்பத்தினர் உடன் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் ரஜினி.



இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தன் ரசிகர் ஒருவரின் மகள் சவுமியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அறித்த ரஜினி காணொளி மூலம் அவரை தொடர்பு கொண்டு சீக்கிரம் குணமாக வாழ்த்தினர். அந்த வீடியோவில் ‛‛சவுமியா கண்ணா எப்படி இருக்க, பயப்படாத தைரியமாக இரு ஒன்றுமில்லை. கொரோனாவால் என்னால் நேரில் வர முடியவில்லை, எனக்கும் சற்று உடல்நலம் சரியில்லை. இல்லையென்றால் கட்டாயம் வந்திருப்பேன். உனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாம் சரியாகிவிடும், தைரியமாக இரு'' என தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த வீடியோ வைரலானது.