2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்திருந்த பேச்சுலர் படம் கடந்த 3ம் தேதி வெளிவந்தது. சதீஷ்குமார் இயக்கிய இந்த படம் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசியது. ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்றது. மூன்றாவது வாரமாக ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிப்பு விழாவை படக்குழு நடத்தியது.
ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது: ஒரு படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் அந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மகிழ்கிறேன். ஒரு படத்திற்கு இதுதான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது தயாரிப்பாளரும், இயக்குனரும் தான்.
சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் பேச்சிலர் படம் ரசிகர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் 3வது வாரத்தைக் கடந்திருக்கிறது. மீடியாக்கள் தந்த அறிவுரைக்கும், விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. வெளியிடப்பட்ட கருத்துக்களில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்கிறோம். என்றார்.