சேரன் நடித்துள்ள ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படம் அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தபடியாக அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. ‛‛உங்கள் அனைவரின் அன்போடு இன்று இனிய துவக்கம் என தெரிவித்துள்ளார் சேரன். இந்த படத்திற்கு தமிழ்க்குடிமகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்க, லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.