காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான தம்பி ராமைய்யாவின் மகனான உமாபதி, சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிசுற்று வரை சென்றார். சர்வைவர் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் அனைவருமே அங்கு தாங்கள் உடல் மற்றும் மன ரீதியில் பட்ட கஷ்டங்களை குறித்து சொல்லி வருகின்றனர். போட்டியில் ஜெயித்த விஜயலட்சுமியும் தனது காலில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு செல்லும் போது 80 கிலோ உடல் எடையில் இருந்த உமாபதி தற்போது 66 கிலோவாக குறைந்துவிட்டாராம். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முன்பு இருந்ததை விட மிகவும் ஒல்லியான தோற்றம் கொண்டவராக இருக்கிறார். சர்வைவர் நிகழ்ச்சிக்கு முன், நிகழ்ச்சிக்கு பின் என இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு வெளியிட்டுள்ள அவர், 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' பதிவிட்டுள்ளார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் தோற்றுப் போனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும், புகழையும் உமாபதி சம்பாதித்துவிட்டார். இனி அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் ஏற்படுமா என பார்க்கலாம்.