ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்கள் பங்குபெறும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் ஒன்று. இதில் 12 ஜோடிகள் பங்கேற்று வந்தனர். பல போட்டிகள், சவால்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் வாரவாரம் ஒரு ஜோடி எலிமினேட் ஆகி வந்தது. நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தில் டாப் 5 ஜோடிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வைல்டு கார்ட் எண்ட்ரியாக மேலும் ஒரு ஜோடி கலந்துகொள்ள, 6 ஜோடிகள் பைனலில் மோதியது. இந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில் சரத் - கிருத்திகா ஜோடி வெற்றி பெற்று டைட்டிலை கைப்பற்றியது. மேலும், பரிசுத்தொகையாக ரூ. 10 லட்சத்தையும் வென்றது. இவர்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.