அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தமிழ்ச்செல்வி தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆஷிகா படுகோன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி சீரியல்களிலும் நடித்து கலக்கி வந்த ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி என்பவருடன் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு ஆஷிகா நடிக்க மாட்டார் என்றே ரசிகர்கள் பலரும் கருதினர்.
இந்நிலையில் அவர் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே என்ற தொடரில் மீண்டும் கதாநாயாகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஆஷிகாவை மீண்டும் திரையில் காணப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிங்கப்பெண்ணே தொடரில் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த தொடரில் அவருக்கு பதிலாக ஆஷிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.