ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தலைமறைவு நடிகர் | இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? |
அரசியலில் இருந்து ஒதுங்கியபின் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸையும், ஹீரோவாகவே துவங்கிய சிரஞ்சீவி தற்போது கைவசம் நான்கைந்து படங்களை வைத்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்டவர், தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் படத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில் அவரது 154 படமும் கடந்த மாதம் துவங்கியுள்ளது. இந்தப்படத்தை பாபி (கே.எஸ்.ரவீந்திரா) என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவி அன்டர்கவர் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்திற்கு வால்டர் வீரய்யா என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடைபெறும் கதையாக இந்தப்படம் உருவாகிறது.