என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நக்ஷத்திரா நாகேஷ். கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று(டிச., 9) இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த சில தினங்களாக தனது திருமண கொண்டாட்டங்கள் தொடர்பான போட்டோ, வீடியோக்களை தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தார் நக்ஷத்திரா. குறிப்பாக சங்கீத், மெஹந்தி தொடர்பான நிகழ்வுகள் குறித்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். திருமணம் முடிந்த நக்ஷத்திரா - ராகவ் தம்பதியருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.