'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம் ஒரு தரப்பினரின் எதிர்ப்புக்கும் ஆளாகியது. ஜெய் பீம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
சமீபத்தில் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் 'ஜெய் பீம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் கூகுளில் இந்த வருடம் 2021ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களில் ஜெய் பீம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படமும், 3-வது இடத்தை சல்மான்கானின் ராதே படமும் பிடித்துள்ளன. 6வது இடத்தை விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பெற்றுள்ளது.