மோகன்லாலின் அலோன் படமும் ஓடிடி ரிலீஸ் தான் | நடிகர் பூ ராமு மறைவு ; மம்முட்டி நெகிழ்ச்சி பதிவு | சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிஜுமேனன் | ரேவதிக்கு விருது : கொண்டாடி மகிழ்ந்த தோழிகள் | பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான் | பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை | தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் 'இந்தியன் 2' | 'வீட்ல விசேஷம்' வெற்றி : பரிசுகளை வழங்கிய ஆர்ஜே பாலாஜி |
மலையாள சினிமாவில் மட்டுமே சினிமா பின்னணி கொண்ட கதைகளை படமாக்கி பெருமளவில் வெற்றியும் பெறுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான டிரைவிங் லைசென்ஸ் படத்தை இதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக சொல்லலாம். இந்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுத்திருந்தார் லால் ஜூனியர் என அழைக்கப்படும் ஜீன் பால் லால். இவர் சண்டக்கோழி வில்லன் நடிகரான லாலின் மகன் தான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையுடன் இணைந்து இவர் இயக்கிய சுனாமி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் ஆச்சர்யமாக தற்போது மீண்டும் ஒரு சினிமா பின்னணி கொண்ட கதையையே மீண்டும் கையில் எடுத்துள்ளார் லால் ஜூனியர். இந்தப்படத்திற்கு நடிகர் திலகம் என பெயர் வைத்துள்ளார்கள். டொவினோ தாமஸ் மற்றும் நகைச்சுவை நடிகரான சௌபின் சாஹிர் இருவரும் இதில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்..