கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
ராஜமவுலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'.
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக டிரைலர் அமைய உள்ளது.
இதனிடையே, இப்படத்தின் வியாபாரம் மட்டும் மொத்தமாக 900 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது. தென்னிந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமை, வட இந்திய வெளியீட்டு உரிமையாக 500 கோடி, வெளிநாட்டு உரிமையாக 70 கோடி, அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமை 170 கோடி, சாட்டிலைட் உரிமையாக 130 கோடி, இசை உரிமையாக 20 கோடி என மொத்தமாக 890 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் உரிமை, வசூல் ஆகியவற்றைக் கணக்கில் வைத்துதான் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான வியாபாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் இதுவரையிலும் வேறு எந்தப் படத்தின் வியாபாரமும் இந்த அளவிற்கு நடந்ததில்லை. மாநில மொழியாக இருக்கும் ஒரு படத்தின் வியாபாரம் ஹிந்திப் படங்களின் வியாபாரத்தை விட அதிகமாக இருப்பதைப் பார்த்து ஹிந்தித் திரையுலகம் ஆச்சரியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதுவும் புதிய சாதனைதான். எனவே, தென்னிந்திய மொழி ரசிகர்களை விட ஹிந்தி ரசிகர்களும், ஹிந்தித் திரையுலகினரும் 'ஆர்ஆர்ஆர்' டிரைலரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.