பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3ந் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். ஜெர்மனியை சேர்ந்த பேஷன் டிசைனர் மற்றும் மாடலான மதுமிதாவும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். தனது கொஞ்சும் தமிழால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் மதுமிதா.சரளமாக தமிழ் பேச கற்றுக்கொண்டதால் கமல்ஹாசனிடமும் பாராட்டுக்களை பெற்றார்.
கடந்த மாதம் எவிக்ஷனில் மக்களால் வெளியேற்றப்பட்ட மதுமிதா இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது தோழியான தீயுடன் வடிவேலுவை சந்தித்துள்ளார் பிக்பாஸ் மதுமிதா. வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகிறார். தனது தந்தையின் உதவியுடன் வடிவேலுவை சந்திக்க மதுமிதாவை, தீ அழைத்து சென்றிருக்கலாம். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.