சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பேச்சிலர் படத்தை அடுத்து ஜெயில், இடிமுழுக்கம் போன்ற படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார், அடுத்தபடியாக ரிபெல் என்றொரு படத்தில் நடிக்கிறார். நிகேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கு கிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது அப்போது இயக்குனர்கள் பா.ரஞ்சித், நலன்குமாரசாமி, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரெபெல் படம் மூணாறு பகுதியில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகிறது. அந்த பகுதி மக்களின் வாழ்வியல், அரசியலை சார்ந்த கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு பிறகு ஸ்டுடியோ கிரீ ன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். மேலும் இதே தலைப்பில் தெலுங்கில் பிரபாஸ் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.