ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாநாடு. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை முதலில் கலைஞர் டிவி வாங்க தான் பேசி வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி நிறுவனம் வருகிற பொங்கலுக்கு மாநாடு படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டது.
ஆனால் மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள சோனிலிவ் நிறுவனமோ, மாநாடு படம் ஓடிடி தளத்தில் வெளியாகி 75 நாட்கள் ஆன பிறகே டிவியில் ஒளிபரப் பப்பட வேண்டும் என்று ஒரு கண்டிசனை போட்டு விட்டது. அதன்காரணமாகவே கலைஞர் டிவி பின்வாங்கிவிட இப்போது மாநாடு டிவி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் வெளியாகியிருப்பதால் நான்கு வாரங்கள் கழித்து அதாவது இந்த மாதம் இறுதியில் சோனி லிவ் ஓடிடியில் மாநாடு படம் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.