'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விக்ரம் படத்தில் நடித்தபடியே பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், அமெரிக்காவிற்கு சென்று திரும்பியபோது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பும் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல் வீடு திரும்பி விட்டதாகவும், அவரது வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பது போன்ற ஒரு போட்டோவுடன் சமூகவலைதளத்தில் வைரல் ஆனது.
இதுப்பற்றி மக்கள் நீதி மையம் வெளியிட்ட அறிக்கை : கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண நலமடைந்து வீடு திரும்புவார். பொது வெளியில் உலவும் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.