அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
புதுமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி இணைந்து நடித்துள்ள படம் பேச்சுலர். டிசம்பர் 3-ந்தேதி திரைக்கு வரும் இந்த படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், இந்த படம் இதுவரை நான் நடித்ததில் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ளது. அதனால் நானும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு மணிரத்னம், செல்வராகவனைப்போன்று சதீஷ் செல்வகுமார் படத்தை ஒரு புதுமையான பாணியில் இயக்கி யிருக்கிறார். புதுமுகங்கள் அதிகமாக நடித்துள்ள இந்த படத்தில் எனக்கு ஜோடியாக திவ்யபாரதி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவர் ரொம்பவே பதட்டமாக காணப்பட்டார். அதனால் அவருக்கு தைரியம் கொடுத்து நம்பிக்கை யுடன் நடிக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.