'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மாநாடு. யுவன் இசையமைத்து இருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். பல தடைகளை தாண்டி வெளிவந்த இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இரு நாட்களிகலேயே ரூ.14 கோடி வசூலித்தது. தொடர்ந்து படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதை படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படியொரு வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : ‛‛இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் மாநாடு. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.