ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மலையாளத்தில், தனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . கீர்த்தியின் பள்ளிக்கால தோழர் விஷ்ணு ராகவ் இயக்குகிறார்
படத்தின் துவக்க விழா பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. டொவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்ட படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “ஒரு மகளாக தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருந்தது. தந்தை தானே, வாய்ப்பு எளிதாக அமைந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதுவும் அப்படி சாதரணமாக கிடைத்து விடாது. ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகி உள்ளது” என கூறியுள்ளார்.